அரியலூர்,ஆக.28: அரியலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினர் மேற்கொண்ட சோதனையில் ரூ.7.43 லட்சம் பறிமுதல் செய்தனர். மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் ஆய்வாளர்கள் கவிதா தலைமையிலான 6 பேர் கொண்ட காவல் துறையினர், நேற்று மாலை 5 மணியளவில் அரியலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்து, கதவுகளை மூடி அனைத்து ஆவணங்களையும் சோதனை செய்தனர்.
சோதனையில் வட்டாட்சியர் மற்றும் அலுவலர்களின் கைப்பேசி ஜீபே கணக்கில் ரூ.7,24,500 மும், கையிருப்பில் ரூ.19,000 ரொக்கமும் வைத்திருந்தது தெரியவந்தது.இந்த தொகை வண்டல் மண் அள்ளிக் கொள்ளுவதற்காக பயனாளிகளிடமிருந்து லஞ்சமாக பெற்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த தொகையை பறிமுதல் செய்த காவல் துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




