Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டம்

அரியலூர், ஆக.28: அரியலூர் நகராட்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கத்தினர் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். பணியிடம் மற்றும் பதவி உயர்வு மாறுதல்கள் கலந்தாய்வு மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆய்வுக் கூட்டங்களை சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாள்கள், அலுவலக நேரங்களில் நடத்துவதை கைவிட வேண்டும்.

காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். எல்லை விரிவாக்கப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிடவேண்டும்.தமிழ்நாடு நகரப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சட்டம் திருத்தம் செய்து, நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஆக.27 இல் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.அதன்படி, நேற்று அரியலூர் நகராட்சி அலுவலகத்தில், பொது சுகாதாரத் துறை பணியாளர்களைத் தவிர மற்றத் துறையைச் சேர்ந்த ஊழியர்கள் 31 பேர் ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டனர். இதனால் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டன என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.