Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

சீர்காழி அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சீர்காழி, மே 28: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கரைமேடு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் முருகன்(65). விவசாயியான இவர் மற்றும் கரைமேடு பகுதியை சேர்ந்த 15 பேர் வேனில் திருவாரூர் மாவட்டம் அம்பகரத்தூர் பகுதி கோயிலுக்கு சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். வைத்தீஸ்வரன் கோயில் அருகே ஆத்துக்குடி பகுதியில் வேன் வந்து கொண்டிருந்தபோது வேனின் டயர் வெடித்து, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் முருகன் என்பருக்கு படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் வேனில் பயணம் செய்த கரைமேடு பகுதியை சேர்ந்த தேன்மொழி, ஜெயந்தி, கரிஷ்மா, சரிதா, லட்சுமி, அனுசியா, மற்றொரு தேன்மொழி, மங்கையர்க்கரசி, அஞ்சம்மாள், தனலட்சுமி, இந்திரா, நான்கு வயது சிறுவன் சாய், ராக்கி, சாந்தகுமார் ஆகியோர் லேசான காயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த வைத்தீஸ்வரன் போலீசார் காயமடைந்தவர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த முருகனின் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்