Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விக்கிரமங்கலம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

தா.பழூர், பிப்.28: அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் விக்கிரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. எனவே, அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என இப்பகுதியில் உள்ள விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்று விக்கிரமங்கலம் மாரியம்மன் கோயில் அருகே நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இந்த கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த நெல்லை விற்று பயனடையலாம் என நெல் கொள்முதல் நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழாவில் இப்பகுதியில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு விற்பனையை துவக்கி வைத்தனர்.