Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட முன்னாள் படைவீரர்களுக்கு வாய்ப்பு

அரியலூர், பிப் 28: அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்தை அணுகலாம் என்று மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் - 2026 ல் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்களை அதிக அளவில் ஈடுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எனவே, அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த தேர்தல் பாதுகாப்பு பணிபுரிய விருப்பமுள்ள 65 வயதிற்குட்பட்ட நல்ல உடல் திறனுள்ள முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் (JCOs) மற்றும் முன்னாள் படைவீரர்கள்(ORs) தங்களது அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் மற்றும் வாக்காளர் அட்டையுடன் “உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், அறை எண் 17, பல்துறை வளாகம் (பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகம்) அரியலூர் 621 704 என்ற அலுவலகத்தை நேரில் அணுகவும். மேலும் விவரங்களுக்கு 04329-221011 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.