Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செந்துறையில் கார் விபத்தில் பெண் பலி

குன்னம், டிச.27: அரியலூர் மாவட்டம் செந்துறை ரவுண்டானா பகுதி ரெங்கா நகரை சேர்ந்தவர் பாரதி (35) இவரது மனைவி கார்த்திகா (28) இவர்களின் மகன் தருண் (11) மகள் காவியா (8) இவர்களின் நண்பர் மகேந்திரன் மகன் சந்திப் (16) ஆகியோர் பெரம்பலூரில் மதியம் தியேட்டரில் படம் பார்த்து விட்டு சென்று கொண்டிருக்கும் பொழுது மாடு குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி சாலையின் இடது புறம் பள்ளத்தில் கவிழ்ந்ததில் பாரதி மற்றும் 3 குழந்தைகள் காயங்களுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கார்த்திகா தலையில் பலத்த காயமடைந்து இறந்து விட்டார். தகவல் அறிந்து வந்த குன்னம் காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன் கார்த்திகா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்