அரியலூர், ஆக.26: அரியலூரிலுள்ள ஒரு தனியார் கூட்டரங்கில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. மாவட்டத்துக்கு புதிய பொறுப்பாளர்கள் மற்றும் மண்டல தலைவர்கள் தேர்ந்தெடுப்பது குறித்து நடைபெற்ற கூட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டத் தலைவர் மாரியம்மாள் தலைமை வகித்தார்.
மேலிடப் பார்வையாளர் திருவண்ணாமலை பிரசாத் கலந்து கொண்டு, இயக்கம் மறு சீரமைப்பின் படி மண்டல தலைவர்களை எப்படி தேர்ந்தெடுப்பது குறித்து பேசினார். சிறப்பு பார்வையாளராக அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட தலைவர் சங்கர் கலந்து கொண்டு பேசினர். இதில், அனைத்து வட்டார மற்றும் மண்டல தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



