ஜெயங்கொண்டம், ஆக.26: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட செங்குந்தபுரம் கிராமத்தில் நேற்று காலை திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கிராம குழு தலைவர் வழக்கறிஞர் ராமலிங்கம் தலைமை வகித்தார்.
ஊர் நாட்டாமைகாரர்கள் செல்வராஜ், குமரகுரு, அறிவழகன், பழனியப்பன், வேல்முருகன் மற்றும் முக்கியஸ்தர்கள் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் இளங்கோவன், புலவர் பழனியாண்டி,ஆசிரியர்கள் கோவிந்தசாமி, சண்முக சுந்தரம், மணி, நகர் மன்ற உறுப்பினர் சுப்பிரமணியன், புனிதவேல் உள்ளிட்ட பலர் மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினர். முன்னதாக ஞானப்பிரகாசம் வரவேற்றார். இறுதியில் நாட்டாமைகாரர் மதியழகன் நன்றி தெரிவித்தார்.



