ஜெயங்கொண்டம் அக்.23: அரசு மேல்நிலைப்பள்ளி பொன்பரப்பியில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி கருத்தரங்கம் மற்றும் சைக்கிள் பேரணி நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் ராமலிங்கம் தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியர் என் எஸ் எஸ் திட்ட அலுவலர் போதைப்பொருள் ஒழிப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் பஞ்சாபிகேசன் வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்பு விருந்தினராக செந்துறை காவல் ஆய்வாளர் சிவகுமார் மற்றும் அரியலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் சாந்தி இணைய வழி குற்றப்பிரிவு ஆய்வாளர் சுரேஷ் பாபு கலந்து கொண்டு போதைப்பொருள் ஒழிப்பு பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் விழிப்புணர்வு பற்றி சிறப்புரை ஆற்றினர். சிங்கப்பெண் படை உதவி ஆய்வாளர் வளர்மதி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சின்னதுரை, தலைமை காவலர் மணிகண்டன், தமிழ்ச்செல்வி, வசந்தி மற்றும் இருபால் ஆசிரியர்கள், 496 மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
போதைப்பொருள் ஒழிப்பு மன்றத்தின் சார்பில் சைக்கிள் பேரணி தலைமையாசிரியர் கொடியசைத்து துவக்கி வைத்தார். 25 நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர், மற்றும் மாணவர்கள், காவல் ஆய்வாளர் உள்ளடக்கிய சைக்கிள் பேரணி பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து துவங்கி முக்கிய வீதிகளில் வழியாக விழிப்புணர்வு பதாகைகளுடன் கோஷமிட்டவாரு சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர். இறுதியில் ஜெயராமன் முதுகலை ஆசிரியர் அனைவருக்கும் நன்றி கூறினார்


