Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

செந்துறை அருகே மின்னல் தாக்கி விவசாயி பலி

அரியலூர், அக்.23: இரும்புலிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கமலம் ஆடு மேய்க்கும் விவசாயி மின்னல் தாக்கிய உயிரிழந்த சம்பம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வடக்கு இரும்புலிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மனைவி கமலம் (55) விவசாயி ஆன இவர் நேற்று காலை வழக்கம் போல தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்று உள்ளார்.

அவருடன் அதே உரை சார்ந்த முத்தம்மாள், சித்தரா, கண்மணி என்பர்களும் சென்றுள்ளார்கள். இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணியிலிருந்து மழை பெய்து வந்ததால் மேற்கண்ட மூன்று நபர்களும் வீட்டிற்கு வந்து விட்டனர். கமலம் ஒட்டி சென்ற ஆடுகள் தானாக வீட்டிற்கு வந்து விட்டதாகவும் தெரிகிறது. மேற்கண்ட 3 பேரும் ஆடு மட்டும் வீட்டிற்கு வந்து விட்டது கமலத்தை காணவில்லை என்று ஆடு மேய்க்க சென்ற இடத்திற்கு தேடி சென்றனர்.

அப்போது அங்கு கமலம் அணிந்திருந்த ரெயின் கோட் மற்றும் உடைகள் கிழிந்து நான்காம் பக்கமும் சிதறி கிடந்த நிலையில் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கிராம மக்கள் திரண்டு வந்தனர்.

தகவல் அறிந்த இரும்புலிக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் நேற்று மாலை 3 மணியளவில் அந்த பகுதியில் பலத்த இடி சத்தத்துடன் மின்னல் தாக்கிய நேரத்தில் கமலம் வேப்ப மரத்தின் அடியில் நின்ற போது அவர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. இது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.