ஜெயங்கொண்டம், செப். 18: ஆண்டிமடம் ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பாக பெரியார் சிலைக்கு அவரின் 148 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் சிந்தனைச் செல்வன் தலைமையில், ஒன்றிய தலைவர் தியாக.முருகன் ஒன்றிய செயலாளர் பாண்டியன் பெரியார் பெருந்தொண்டர் இராமகிருஷ்ணன், மாவட்டத் துணைச் செயலாளர் கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு “சமூகநீதி நாள்” உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆண்டிமடம் நகர செயலாளர் அண்ணாமலை நகர அமைப்பாளர் பட்டுசாமி, கவரப்பாளையம் கோபால் மோகன், ஹரி, ஜெய்சங்கர் பன்னீர்செல்வம், தண்டபாணி உள்ளிட்ட ஏராளமானேர் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

