Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜெயங்கொண்டம் அரசு அலுவலகங்களில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

ஜெயங்கொண்டம், செப். 18: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியர் ராமசாமி தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெரியையும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெரியையும், எனது வாழ்வியல் வழிமுறைகளாக கடைப்பிடிப்பேன் எனவும், சுயமரியாதை, ஆளுமை திறனும்,

பகுத்தறிவு பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும் எனவும், சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன் எனவும், மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபி மானத்தையும் என்றும் போற்றுவேன் எனவும், சமூக நீதியை அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட உறுதி ஏற்போம் என்ற வாசகங்கள் அடங்கிய உறுதி மொழிகளை கூறி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

இதில் வருவாய் துறை அதிகாரிகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும்,நகராட்சி அலுவலகத்திலும் காவல் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.