Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிசி, ஓபிசி, டிஎன்சி மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்த ரூ.2 லட்சம் வரை உதவித்தொகை

அரியலூர், செப். 18: அரியலூர் மாவட்ட கலெக்டர் மிருணாளினி வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, டிஎன்சி மாணவர்களுக்கு, கற்பிப்பு கட்டணம், சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம் மற்றும் இதர கட்டாய கட்டணங்கள் அல்லது ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 இலட்சம் வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்பங்கள், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், சென்னை - 5, மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம், சென்னை -5, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ( பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்) மற்றும் இணையதளம் www.bcw.tn.gov.in வாயிலாக பெற்றுக்கொள்ளலாம். மத்திய, மாநில அரசின் இதர கல்வி உதவித் திட்டங்களில் பயன்பெறும் மாணவர்கள் இத்திட்டத்திற்கு தகுதியற்றவர்கள்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனம் Bonafide Certificate உடன் பரிந்துரை செய்து, சம்பந்தப்பட்ட நலத்துறைக்கு அனுப்ப வேண்டும். புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்கள் 31.10.2026க்குள், புதிய விண்ணப்பங்கள் 30.11.2026-க்குள் அனுப்பப்பட வேண்டும். Even Semester கட்டண இரசீதுகள் 15.01.2027க்குள் அனுப்பப்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.