பாடாலூர், அக். 17: இரண்டு வீடுகளில் நகை, வெள்ளிக்கொலுசுகள் திருடிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடுகின்றனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நக்கசேலம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர்.
இவரது மனைவி காமாட்சி என்பவரது வீட்டில் 3 பவுன் 7 கிராம் நகையும், அதே ஊரைச் சேர்ந்த நல்லமுத்து மகன் லட்சுமணன் வீட்டில் வெள்ளி கொலுசுகளையும் திருடிச்சென்றனர். இதுகுறித்து பெரம்பலூர் ரூரல் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவான கேமரா காட்சிகளைவைத்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


