Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

20 அடி கிணற்றில் விழுந்த ஆடு தீயணைப்பு வீரர்கள் மீட்பு: உரிமையாளரிடம் ஒப்படைப்பு

தா.பழூர், அக். 17; எதிர்பாராதவிதமாக 20 அடி நீரில்லா கிணற்றில் விழுந்த ஆட்டை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த தீயணைப்பு துறையினர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சுத்தமல்லி, ஆலம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சிநாதன். இவர், ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளில் ஒரு ஆடு வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் ஆட்டின் உரிமையாளர் ஆட்டை தேடி சென்ற நிலையில் ஆடு 20 அடி வறண்ட கிணற்றுக்குள் இருந்தது.  தகவலறிந்த ஜெயங்கொண்டம் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இருந்த ஆட்டை கயிறு கட்டி துரிதமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.