தா.பழூர், அக். 17: தா.பழூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வ காலை உணவுத் திட்டம் மூலம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.அரியலூர் மாவட்டம் தா.பழூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்பொழுது விரிவுபடுத்தப்பட்ட காமராஜர் காலை உணவு திட்டம் மூலம் அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டம் காலையில் கிராமப்புறங்களில் உள்ள பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக மட்டும் காலையில் உணவு செய்து தருவது சற்று சிரமமாக இருப்பதால் ஒரு சில மாணவர்கள் காலை இறை வணக்கம் கூட்டத்தில் மயங்கி விழ்ந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனவே இது போன்ற சில சிரமங்களை குறைக்கும் வகையில் காலை உணவு திட்டம் மாணவரிடம் பெற்றோரிடம் வரவேற்பு பெற்றுள்ளது.
தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தினமும் வழங்கப்படும் சுவையான காலை உணவு, தூய்மையான குடிநீரும் வழங்கப்படுவதை தினமும் பட்டதாரி ஆசிரியர்கள் கவனித்து மாணவர்களுடன் சுவைத்தும் வருகின்றனர். அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தின் மூலம் 94 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.


