தா.பழூர், அக்.16: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோவிந்தபுத்தூர் ஊராட்சிக்குட்பட்ட குமணந்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் குடியரசுத் தலைவர், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், மரக்கன்றுகள் வழங்கி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சி பள்ளித் தலைமை ஆசிரியர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அக்னி சிறகுகள் அறக்கட்டளையைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்துகொண்டு, பள்ளி மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்கள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினர்.


