அரியலூர்,அக்.16: அரியலூர் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 11.9.2026 அன்று நிதித்துறை வெளியிட்ட பத்தாயிரம் மற்றும் அகவிலைப்படி மட்டும் இடைக்கால பென்சனாக வழங்கப்படும் என்ற அரசு ஆணையை திரும்ப பெற வேண்டும்.
பேராசிரியர் பணி மேம்பாடு, எம்.பி.எல்., பி.எச்டி முடித்தவர்களுக்கு ஊக்கத் தொகை உயர்வு எம்.பி.எல் முடித்த பேராசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். இணை பேராசிரியர் பதவி உயர்வு வழங்கிடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் திருச்சி மண்டலச் செயலர் சேட்டு தலைமை வகித்து, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பேராசிரியர்கள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.


