அரியலூர்,அக்.16: மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பிறந்த நாளையொட்டி அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், தமிழ் பண்பாட்டு பேரமைப்பு சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி நேற்று கொண்டாடப்பட்டது.வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அப்துல்கலாம் திருவுருப் படத்துக்கு, தமிழ்ப் பண்பாட்டு பேரமைப்பு தலைவர் சீனி.பாலகிருஷ்ணன் தலைமையில், செயளாலர் கதிர்கணேசன், அமைப்புச் செயலர் நல்லப்பன், துணைத் தலைவர் இளங்கோ, செய்தித் தொடர்பாளர் தமிழ்களம் இளவரசன்,
மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையர் குமரன் மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ், நிலைய மருத்துவ அலுவலர் கொளஞ்சிநாதன், தமிழ் பண்பாட்டு பேரவை துணைச்செயலாளர் மங்கையர்க்கரசி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தி, அப்துல்கலாம் பற்றி நினைவு கூறினர். பின்னர் அனைவரும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். அதனைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகம், மருத்துவக் கல்லூரி வளாகங்களில் மரங்ககன்றுகளை நட்டு வைத்தனர்.


