கலெக்டர் ஆய்வின் போது மண்அள்ளிய பர்மிட் இல்லாத 3 ஜேசிபி 11 டிராக்டர்கள் பறிமுதல்: உரிமையாளர்கள் 14 பேர் மீது வழக்கு பதிவு
அரியலூர், ஜூலை 16: அரியலூர் மாவட்டம் செந்துறை பெரிய ஏரியில் வண்டல் மண் அல்ல அனுமதி பெற்று வண்டல் மண் அள்ளிக் கொண்டு இருந்தனர். அப்பொழுது அந்த வழியே வந்த அரியலூர் கலெக்டர் மிருதாளினி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஏரியில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் ஆழத்தில் வண்டல் மண் அள்ளி இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அங்கு மண் அள்ளிக் கொண்டிருந்த பல டிராக்டர்கள் பர்மிட்டில் இல்லாத வாகனங்கள் என்றும் தெரியவந்தது.
அதனை தொடர்ந்து அனைத்து வாகனங்கள் மீதும் வாகனத்தின் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க தாசில்தார் கோவிந்தராஜிற்கு உத்தரவிட்டார். உத்தரவின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி அம்பிகா செந்துறை போலீசார் கொடுத்த புகாரின் பேரில் வாகன உரிமையாளர்கள் 14 பேரும் மீது வழக்கு பதிவு செய்ததோடு 3 ஜேசிபி எந்திரங்கள் மற்றும் 11 டிராக்டர்களை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர். வண்டல் மண் அல்ல அனுமதி பெற்று மண்ணள்ளி வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதும் அரியலூர் மாவட்ட விவசாயிகளிலேயே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


