ஜெயங்கொண்டம், ஜூலை 16: ஆண்டிமடம் ஒன்றியம் சிலுவைச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது. கல்லாமை இருளை நீக்க பள்ளிகள் பல திறந்து கல்வி வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டு கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த நாளான ஜூலை திங்கள் 15 ஆம் நாளான கல்வி வளர்ச்சி நாள் என அறிவித்த அந்நாளில் காமராஜர் உருவப்படத்தை அலங்கரித்து ஒவ்வொரு ஆண்டும் அனைத்து பள்ளிகளிலும் கொண்டாடி வரும் வேளையில் சிலுவைச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வளமைய மேற்பார்வையாளர் அருமைராஜ் தலைமையில், பள்ளித் தலைமை ஆசிரியர் சசிகலா முன்னிலையில். மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
ஓவிய போட்டியில் கீர்த்தி முதலிடம், மகதி ஸ்ரீ இரண்டாம் இடம், அனுஸ்ரீ மூன்றாம் இடம், கவிதை கூறுதல் போட்டியில் தக்ஷன் முதலிடம், சுமித்திரா இரண்டாம் இடம் பிரியதர்ஷினி மூன்றாம் இடம், பாட்டு போட்டியில் மகதி முதலிடம் அருண்குமார் இரண்டாம் இடம் கார்த்திகா மூன்றாமிடமும் பெற்றிருந்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருமைராஜ் பரிசு பொருள்கள் வழங்கி, இனிப்புகள் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.
