அரியலூர்,அக்.15: பெரம்பலூர் மாவட்டம், கூத்தூர் துணை மின் நிலையத்தில், நாளை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான அரியலூர் மேற்கு பகுதி மற்றும் பெரம்பலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பி.ஆர்.நல்லூர்,கூத்தூர், கூடலூர், குளத்தூர்,ராமலிங்கபுரம்,ரசுலாபுரம்,
உசேன்நகரம், அல்லிநகரம், மேலமாத்தூர்,வெண்மணி, திம்மூர், ஜெமீன் பேரையூர்,மேத்தால் ஆகிய ஊர்களில் காலை 9.30 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.


