Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அரியலூரில் டைல்ஸ் கடையில் திருடியவர் கைது

அரியலூர், அக்.15: அரியலூர் அருகே தவுத்தாய்குளம் என்ற கிராமத்தில் ராஜவேலு என்பவர் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில், கடந்த மாதம் செப்.26ம் தேதி, ரூ.10 ஆயிரம் பணம், ஒரு வெள்ளி குத்துவிளக்கு மற்றும் சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றை மர்ம நபர் திருடிச்சென்றார். தொடர்ந்து, எதிரே முகமது மைதீன் என்பவருக்கு சொந்தமான இரும்புக்கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ.3 ஆயிரம் பணம் மற்றும் 2 செல்போன்களும் திருட்டு போயிருந்தது.

இந்த திருட்டு சம்பவம் குறித்து அரியலூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் அந்த மர்ம நபரை தேடி வந்தனர். இந்த நிலையில், திருட்டில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டம் பெரிய கண்ணூர் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் (44) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர் மீது 25க்கும் மேற்பட்ட வழக்கு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.