ஜெயங்கொண்டம்,அக்.14: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் நாளை (15ம் தேதி) ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் மற்றும் தா.பழூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சூரிய மின்சக்தி (Solar Power) குறித்த சிறப்பு விழிப்புணர்வு அரங்கம் அமைக்கப்பட உள்ளது.இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர் சிலம்பரசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் நிறுவனங்களில் சூரிய மின்தகடுகள் அமைப்பது தொடர்பாக ஒரே இடத்தில் தேவையான அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சூரிய மின்த கடுகள் வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் வங்கிக் கடன் வசதி குறித்த வங்கி அலுவலர்கள். அரசு மானியம் மற்றும் அதனைப் பெறுவதற்கான நடைமுறைகள் குறித்த விளக்கங்கள், தமிழ்நாடு மின் பகிர்மான கழக அலுவலர்களின் வழிகாட்டுதல், விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்த தகவல்கள் ஆகியவை தொடர்பாக பொதுமக்களுக்கு நேரடியாக விளக்கம் அளிக்கப்படும்.
சூரிய மின்சக்தி அமைக்க விரும்பும் பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு, தேவையான ஆவணங்களுடன் விழிப்புணர்வு அரங்கிற்கு வருகை தந்து, மானியம், வங்கிக் கடன் மற்றும் மின்வாரிய நடைமுறைகள் குறித்த முழுமையான தகவல்களைப் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். \”சூரிய மின்சக்தி மின்சார சேமிப்பு மட்டுமல்ல, நமது எதிர்காலத்திற்கான முதலீடும் ஆகும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


