அரியலூர், நவ. 13: அரியலூர் மாவட்டம், 148. குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செந்துறை வட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் - 2026 தொடர்பாக, வினியோகம் செய்த SIR படிவங்களை பூர்த்தி செய்து மீள பெறுதல் மற்றும் ெமாபைல் ஆப்பில் பதிவேற்றம் செய்வது தொடர்பாக, வாக்குசாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில், 148. குன்னம் சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலருமான சக்திவேல் தலைமையில் நடைபெற்றது.
இப்பயிற்சி வகுப்பில், செந்துறை வட்டத்திற்குட்பட்ட 113 வாக்குசாவடி நிலை முகவர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 4.11.2025 முதல் 4.12.2025 வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக நேரில் சென்று வழங்கிய கணக்கீட்டு படிவத்தினை பூர்த்தி செய்து வாக்காளர்களிடமிருந்து பெறுதல், மற்றும் பிஎஸ்ஓ.களின் மொபைல் ஆப்பில் படிவங்களை பதிவேற்றம் செய்வது குறித்த பயிற்சியும், செயல் விளக்கங்களும் வழங்கப்பட்டது.
மேலும் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்ப பெறும் போது, வாக்கு சாவடி நிலை முகவர்கள் வாக்காளர்களுக்கு பூர்த்தி செய்ய உதவுமாறும், வாக்காளர்கள் பூர்த்தி செய்த படிவத்தை நாள் ஒன்றுக்கு 50 படிவங்கள் வரை வாக்குசாவடி நிலை முகவர்கள் சேகரித்து வழங்கலாம் எனவும், அதில் கோரப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் பூர்த்தி செய்யும் விதம் ஆகியவை குறித்தும் எடுத்துரைத்தார். இப்பயிற்சில் செந்துறை வருவாய் வட்டாட்சியர் மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர் அனைத்து பாகங்களுக்குமான வாக்குசாவடி நிலை மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
