Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கல்வி அலுவலரை கண்டித்து பிச்சை எடுக்கும் போராட்டம்

அரியலூர், ஜூன் 13: நீதிமன்றம் உத்தரவிட்டும், பணப்பலன்கள் வழங்காத அரியலூர் தொடக்கக் கல்வி அலுவலரைக் கண்டித்து, ஜூன் 16ம்தேதி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக ஓய்வுப் பெற்ற தலைமை ஆசிரியர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். அரியலூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று கோரிக்கை மனுவுடன் வந்திருந்த அவர், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: செந்துறை அருகேயுள்ள பழமலைநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி, கடந்த 30.6.2024 அன்று ஓய்வுப் பெற்றேன். எனக்கு சேர வேண்டிய பணப் பலன்களை கொடுக்கவில்லை.

இதுகுறித்து மாநில தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டும், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் வழங்க வில்லை. பின்னர் இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில், பணப் பலன்களை உடனடியாக வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும், ஓய்வு பணப்பலன்கள் வழங்கப்படவில்லை. தற்போது நான் மன உளைச்சலில் உள்ளேன். தொடக்கக் கல்வி அலுவலரை கண்டித்து, ஜூன் 16ம்தேதி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட போகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.