தா.பழூர், செப். 11: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ளது அறங்கோட்டை கிராமத்தில் நடராஜன் (50) விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான மின் மோட்டார் உடன் கூடிய பம்ப் செட் அப்பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்று படுகை பகுதிக்கு அருகே உள்ளது. இந்த பம்ப் செட்டில் பகுதிக்கு தஞ்சை மாவட்டம் திருப்புறம்பியம் கிராமத்தைச் சேர்ந்த தளபதி(32) என்பவர் காலை 11 மணி அளவில் சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர் அந்த வழியாக சென்றவர்கள் பார்த போது மின்சாரம் தாக்கி தளபதி இறந்து கிடப்பதாக கூறினர். இதுகுறித்து விக்கிரமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற விக்கிரமங்கலம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விக்கிரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

