Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தொறடேரி கரை உடைப்பு 20 ஏக்கர் சோளம் நீரில் மூழ்கியது

அரியலூர், செப்.11: அரியலூர் நகராட்சியை ஒட்டியுள்ளது அம்மாகுளம் கிராமம். இங்குள்ள விவசாய நிலத்தில் விவசாயிகள் மொத்த சோளத்தை விதைத்து அதன் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்துவது வழக்கம். அண்மையில் தங்களது விவசாய நிலங்களை உழுது முத்து சோளம் விதைத்து முளைத்து வருவதற்காக காத்திருந்த நிலையில்,நேற்று திடீரென சிலர் அருகில் உள்ள தொறடேரியை உடைத்து விட்டுள்ளனர்.

ஏறக்குறைய சுமார் ஒரு 20 ஏக்கர் அளவிற்கு விதைக்கப்பட்டிருந்த மொத்த சோளம் முற்றிலுமாக நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஒருபுறம் விதைத்த விதை வீணான நிலையில் தங்களது நிலத்தில் உள்ள மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். தவுத்தாய்குளம் கிராமத்தில் அமைந்துள்ள தொறடேரியில் சிலர் மீன் குத்தகை ஏலம் எடுத்திருந்ததாகவும், மீன் பிடிப்பதற்கு ஏற்ப ஏரி தண்ணீரை முன்னறிவிப்பு ஏதும் இன்றி ஜேசிபி இயந்திரம் மூலம் வெளியேற்றுவதற்காக ஏரியில் கரையில் உடைப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

அந்த ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீர் அருகில் உள்ள நிலங்களில் உட்கொண்டதால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். இந்த விவகாரத்தில் உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை விசாரித்து ஏரியை அனுமதி இன்றி உடைத்து விட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரி தண்ணீர் விவசாய நிலத்தில் உட்புகுந்து ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு பெற்று தர வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.