Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

அரியலூரில் சாலைவிபத்தில் மூளைச்சாவு அடைந்த அரசு செவிலியரின் உடல் உறுப்பு தானம்

அரியலூர், அக்.10: அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சாலை விபத்தில் காயமடைந்த அரசு செவிலியர் மணிபிரியா (30) என்பவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டு உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது உடலுக்கு அரசு மரியாதை செய்யும் விதமாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட கலெக்டர் மிருணாளினி மரியாதை செலுத்தினார்.

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 06.10.2026 அன்று சாலை விபத்தில் காயமடைந்த அரசு செவிலியர் மணிபிரியா என்பவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரை பரிசோதித்து தொடர் சிகிச்சையை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் 08.10.2026 அன்று அதிகாலை 3.50 மணியளவில் மூளைச்சாவு அடைந்ததாக உறுதிசெய்யப்பட்டது.

மருத்துவக் குழுவினர் அவரது உறவினர்களிடம் உறுப்பு தானம் செய்ய கனிவுடன் கேட்டுக்கொண்டதற்கிணங்க உறவினர்கள் முழு சம்மத்துடன் மணிபிரியாவின் இரண்டு சிறுநீரகங்கள் தஞ்சாவூர் மற்றும் மதுரை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கும், இரண்டு கண்கள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கும், கல்லீரல் திருநெல்வேலி ஸ்ரீ காவேரி மருத்துவமனைக்கும், தோல் மதுரை கிரேஷ் கென்னட் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டு ஆறு பயனாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது.

மேலும், உடல் உறுப்புகள் தானம் செய்த மணிபிரியா உடலுக்கு மாவட்ட கலெக்டர் மிருணாளினி, மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் காவல் துறை மூலம் ஒப்படைக்கப்பட்டது இந்நிகழ்வின்போது அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் குமரன், நிலைய மருத்துவ அலுவலர் கொளஞ்சிநாதன், மாவட்ட சுகாதார அலுவலர் ராம்கணேஷ், மருத்துவர்கள், செவிலியர்கள், தொடர்புடைய துறை சார்ந்த அலுவலர்கள், உறவினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.