Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அரியலூர் மாவட்டத்தில் முன்னாள் படை வீரர்கள் குறைதீர் கூட்டம்

அரியலூர்,அக்.10: அரியலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், “முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட கலெக்டர் மிருணாளினி, தலைமையில் நேற்று நடைபெற்றது. முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட கலெக்டர் பேசியதாவது: தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி மாவட்டங்களில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் அளித்துள்ள கோரிக்கை மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் தேசத்திற்கு சேவையாற்றியதை போலவே தங்களது சுற்றுப்புறங்களில் உள்ள பொதுமக்களிடம் தேசத்திற்கு சேவையாற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

மேலும், இக்கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் 45 நபர்கள் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 22 மனுக்களை அளித்தனர். தொடர்ந்து, முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 04 நபர்களுக்கு ரூ.39,990 மதிப்பில் கண்கண்ணாடி நிதியுதவி மற்றும் இரண்டு மகன்களை இராணுவப்பணிக்கு அனுப்பிய அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெற்றோர் ஒருவருக்கு போர்ப்பணி ஊக்க மானியத் தொகையினையும் மாவட்ட கலெக்டர் மிருணாளினி வழங்கினார்.

இக்கூட்டத்தில் அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலக உதவி இயக்குநர் கர்னல் ஜெயக்குமார் (ஓய்வு), முன்னாள் படைவீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் தங்களது பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்குக் காய்ச்சல் அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.