Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அரியலூரில் இன்று மகாளய அமாவாசை திதி

அரியலூர், அக். 10: புரட்டாசி மாத மகாளய அமாவாசை முன்னிட்டு அரியலூர் நீர் நிலைகளில் பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு இன்று திதி கொடுக்க உள்ளனர். அதன்படி இன்று காலை 5:30 மணி முதல் 11:30 மணி வரை தொடர்ச்சியாக பொதுமக்கள் தங்கள் முன்னோர்களை நினைத்து வாழை இலையில் பூச்சரம், அரிசி, தேங்காய், வாழைக்காய் மற்றும் வெற்றிலை, பாக்கு வாழைப்பழம் ஆகியவற்றுடன் வேத மந்திர துணையுடன் திதி கொடுக்க உள்ளனர்.