Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தலைமை தேர்தல் ஆணையரை கண்டித்து இந்தியா கூட்டணி 13ம் தேதி ஆர்ப்பாட்டம்

அரியலூர்,அக்.9: தலைமை தேர்தல் ஆணையரை கண்டித்து, அரியலூரில் இந்தியா கூட்டணி சார்பில் அக்.13ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று அக்கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், தலைமை தேர்தல் ஆணையரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் மாரியம்மாள் தலைமை வகித்தார்.

மாநில துணைத் தலைவர் ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசினார். மதிமுக மாவட்டச் செயலர் ராமநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் இளங்கோவன், தவெக மாவட்டச் செயலர் சிவகுமார், விசிக மாவட்ட பொறுப்பாளர் மதிவாணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி செல்வம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.முன்னதாக நகர காங்கிரஸ் தலைவர் சிவகுமார் வரவேற்று பேசினார்.