Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

அரியலூர், செப். 9: அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் கல்வி உதவித்தொகைத் தொகை பெற விண்ணப்பிக்கலாமென கலெக்டர் தெரிவித்தார். அரியலூர் கலெக்டர் மிருணாளினி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான மருத்துவம், பொறியியல், தொழிற்கல்வி, ஒருங்கிணைந்த தொழிற்கல்வி மற்றும் மேனேஜ்மென்ட் போன்ற கல்வியில் சேர்க்கை பெற்ற முன்னாள் படைவீரர்கள், விதவைகளின் சிறார்கள் மற்றும் படைப்பணியின்போது இறந்த படைவீரர்களின் சிறார்கள் ஆகியோருக்கு பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இக்கல்வி உதவித்தொகையைப்பெற +2 மற்றும் முதுகலை பட்டத்திற்கான குறைந்தபட்ச கல்வி தகுதியில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2026-2027 ஆம் கல்வி ஆண்டில் சேர்க்கைப் பெற்றவர்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். பாரதபிரதமரின் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைனில் www.ksb.gov.in http://www.ksb.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் நேரடியாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க விரும்புவர்கள் தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் அறிய www.ksb.gov.in http://www.ksb.gov.in/ PMSS - General Information என்ற Link-ஐ Click செய்யவும். விண்ணப்பித்த பின்னர் உரிய ஆவணங்களின் அசல் மற்றும் நகலுடன் சரிபார்த்தலுக்காக முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பாரத பிரதமரின் கல்வி உதவி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கடைசி நாள் 31.12.2026. மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண். 04329-221011 மூலமாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் மிருணாளினி, தெரிவித்துள்ளார்.