Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செந்துறை அருகே சரக்கு ஆட்டோ மோதி முதியவர் பலி

அரியலூர், செப்.9: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சரக்கு ஆட்டோ மோதியதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரியலூர் அடுத்த வெள்ளூர் கீழத்தெருவைச் சேர்ந்த முருகேசன் நேற்று முன்தினம் இரவு தனது இரு சக்கர வாகனத்தில், ராமசாமி (58), அருள்மணி ஆகியோரை அழைத்துக்கொண்டு செந்துறையில் இருந்து நக்கம்பாடிக்கு சென்று கொண்டிருந்தார். நக்கம்பாடி அய்யனார் கோயில் அருகே வந்த போது, எதிரே அதிவேகமாக வந்த சரக்கு ஆட்டோ இரு சக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

இதில், பலத்த காயமடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற செந்துறை காவல் துறையினர், ராமசாமியின் சடலத்தையும், படுகாயத்துடன் கிடந்த முருகேசன், அருள்மணி ஆகிய இருவரையும் மீட்டு, அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.