Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விக்கிரமங்கலம் அருகே கொட்டகையில் இறந்து கிடந்த முதியவர்

தா.பழூர் ஜன. 9: விக்கிரமங்கலம் அருகே விவசாய நிலத்தில் கொட்டகையில் இறந்து கிடந்த முதியவர் சடலத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கொலையனூர் கிராமம் மேல தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன்(70). இவர் விவசாயி. இவர் மேலத்தெரு அருகே உள்ள தனது விவசாய நிலத்தில் கொட்டகை அமைத்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் சுந்தர்ராஜை பார்ப்பதற்காக அங்கு சென்றுள்ளார். அப்போது பழனிச்சாமி கூப்பிட்டும் அசைவின்றி இறந்து கிடந்தார். இதனால் சந்தேகம் அடைந்த பழனிசாமி மகன் ராஜதுரையை அழைத்து வந்து பார்த்தபோது சுந்தர்ராஜ் இறந்து கிடந்தது தெரிய வந்துள்ளது.

மேலும் இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் ராஜதுரை புகார் அளித்தார். புகாரின் பேரில் எஸ்ஐ காமராஜ் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.