Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஆனந்தவாடி ஊராட்சியில் அரசின் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி

ஜெயங்கொண்டம், அக்.8: அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆனந்தவாடி ஊராட்சியில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதில் முதல்வர் அறிவித்த 500 யூனிட் வரை மின்சாரம் பயன்டுத்தும் மக்களுக்கு, விலையில்லாமல் வழங்கப்படும் மின்சாரத்தை 200 யூனிட்டுகளாக உயர்த்தி வழங்கி மின் நுகர்வோரின் மாத செலவை குறைத்தது, விவசாயப் பெருமக்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகப் பெற்ற கடனை தள்ளுபடி செய்தது,

குறுவை தொகுப்புத்திட்டம் வழங்கியது, பெண்கள் பாதுகாப்பினை உறுதி செய்யும் ‘சிங்கப்பெண் சிறப்புஅதிரடிப் படையை உருவாக்கியது, தமிழ்நாட்டில் வேரூன்றியிருந்த போதை கலாச்சாரத்தினை ஒழிக்க மாவட்டந்தோறும் போதைப்பொருள் தடுப்புச் சிறப்பு பிரிவு உருவாக்கியது, கல்வி நிறுவைங்கள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் பொதுமக்களின் அன்றாட வாழ்விற்கு இடையூறாக இருந்த 717 சில்லறை விற்பனை மதுபான கடைகளை மூடியது, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ ,

அரசு பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில் வெற்றிப்பயணம் திட்டங்கள், தொடர்பான புகைப்படங்கள், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. இ0தனை, ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து தெரிந்து கொண்டனர்.