தா.பழூர், ஆக. 8: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அத்தனேரி கிராமத்தில் உள்ள ஸ்ரீ காட்டு பிள்ளையாருக்கு ஆடி மாதம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அத்தனேரி கிராமத்தில் உள்ள காட்டுப் பிள்ளையாருக்கு அப்பகுதி மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் வசிப்பவர்களுக்கு குலதெய்வமாக இருந்து வருகிறது. இந்தக் கோயில் தற்பொழுது கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் பிள்ளையாருக்கான சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆடி மாதம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு காட்டு பிள்ளையாருக்கு மாப்பொடி, மஞ்சள் பொடி, எலுமிச்சை, பால், தயிர், தேன், நெய், இளநீர், கரும்பு சாறு, பஞ்சாமிர்தம் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களைக்கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சந்தனக்காப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பிள்ளையாருக்கு மங்கள இசையுடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.



