Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள் மாலை அணிவித்து மரியாதை

தா.பழூர், ஆக. 8: அரியலூர் மாவட்டம் தா.பழூர்-கிழக்கு ஒன்றிய தி.மு.க அலுவலகத்தில், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 8 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது திருவுருவ படத்திற்கு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஒன்றிய கழக செயலாளருமான க.சொ.க.கண்ணன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் ஒன்றிய, மாவட்ட பிரதிநிதி, மாவட்ட அணி நிர்வாகிகள் கிளைக்கழக செயலாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். இது போல் தா.பழூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நிர்வாகிகள் சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.