Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஜெயங்கொண்டத்தில் சமயபுரம் மாரியம்மன் ஆலய பால்குட திருவிழா

ஜெயங்கொண்டம். ஆக .8: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தா. பழூர் சாலையில் சமயபுரம் மாரியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆடி மாதம் நான்காவது வெள்ளி கிழமையான நேற்று பால்குட திருவிழா நடைபெற்றது. ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் இருந்து கங்கணம் கட்டிய பக்தர்கள் பால்குடம் மற்றும் தீச்சட்டி ஏந்தி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று தா.பழூர் சாலையில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலை அடைந்தனர்.

இதனையடுத்து பக்தர்கள் கொண்டு வந்த பாலால் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனையும் காண்பிக்கப்பட்டது. அப்பொழுது ‘ஓம் சக்தி, ஆதிபராசக்தி’ என கோஷமிட்டு பக்தர்கள் மாரியம்மனை வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் மற்றும் சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.