ஜெயங்கொண்டம், ஆக. 7: அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், வரதராஜன் பேட்டை, தொன் போஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுேகருத்தரங்கம் மற்றும் பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஆண்டிமடம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் குணசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு போதைப்பொருளின் தீமைகளைப்பற்றி எடுத்துரைத்தார். மேலும் உதவி ஆய்வாளர்கள், பள்ளியின் தாளாளர். தாமஸ் லூயிஸ் மற்றும் தலைமையாசிரியர் பிரான்சிஸ் சேவியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு போதை பொருட்களால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் உதவி ஆய்வாளர் அறிவழகன், மாணவர்களுக்கு சொற்பொழிவு வழங்கினார். தொடர்ந்து பேரணி தொன்போஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் இருந்து வரதராஜன் பேட்டை பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. அதில், ஆசிரியர் ரங்கநாதன் பொதுமக்களிடையே விழிப்புணர்வு உரை ஆற்றினார். தேசிய மாணவர் படை அதிகாரி தேசிய மாணவர் படை ஆசிரியர் ஸ்டாலின் இந்த நிகழ்வுகளை தயார் செய்து தொகுத்து வழங்கினார்.



