ஜெயங்கொண்டம், ஆக. 6: ஆண்டிமடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சம வாய்ப்பு, சமூகநீதி, ஜனநாயகம் அனைவருக்கும் கிடைக்க கேட்டு நடை பயண பரப்புரை இயக்கத்தை தொடங்கினர். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பஸ் ஸ்டாண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சம வாய்ப்பு, சமூக நீதி, ஜனநாயகம் அனைவருக்கும் கிடைக்க கேட்டு மாற்றத்தை நோக்கி என்ற தலைப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மக்களை சந்திக்கும் நடை பயண பரப்புரை இயக்கத்தை நேற்று ஆகஸ்ட் 6-ந்தேதி தொடங்கி வைத்தனர். இந்த பிரச்சார நடை பயணமானது 6-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
தொடக்கமாக ஆண்டிமடம் பஸ் நிறுத்தத்தில் நடை பயண பிரச்சார இயக்கம் மாவட்ட தலைவர் நடராஜன் வகித்து கண்டன உரை நிகழ்த்தினார். முன்னதாக விவசாய தொழிலாளர் சங்க ஆனந்தன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சிக்கு பருமாணந்தம், கவர்னர், அந்தோணி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். நடைப்பயண பிரச்சாரமானது. ஆண்டிமடம் பஸ் நிறுத்தத்தில் தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் பஸ் நிலையத்திற்கு வந்து முடிவடைந்தது. முன்னதாக பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர். முடிவில் ரத்தினசாமி நன்றி கூறினார்.




