Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டி.களத்தூரில் சிறப்பு கிராம சபை கூட்டம்

பாடாலூர், ஜூன்.6: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா டி.களத்தூர் கிராமத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் கிராம வறுமை ஒழிப்பு சங்க கட்டடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊராட்சி செயலர் ராஜசேகரன் தலைமை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலரும், பற்றாளருமான அல்லிராணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஊராட்சிக்கான வரவு செலவுகள் குறித்து பொதுமக்களிடையே வாசித்து ஒப்புதல் பெறப்பட்டது.

மேலும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்களிடம் குறைகள் கேட்கப்பட்டது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் டி.களத்தூர், நத்தக்காடு ஆகிய கிராமங்களிலிருந்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.