Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரியலூர் காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்பி திடீர் ஆய்வு

அரியலூர், ஜூன்.6: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பா.சாஸ்திரி அரியலூர் காவல் நிலையத்தில் நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். சட்டவிரோத செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகள், மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். சட்ட ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கை குறித்து காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும் அரியலூர் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள புறக்காவல் நிலையத்தின் சிசிடிவி கேமராக்களின் பயன்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்து, கண்காணிப்பை வலுப்படுத்த அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது அரியலூர் காவல் ஆய்வாளர் சட்டநாதன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் உடன் இருந்தனர்.

இதனை தொடர்ந்து அரியலூர் மாவட்டம் தா.பழூர் காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்பி விஸ்வேஷ் பா.சாஸ்திரி வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது சட்ட ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கை குறித்து காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். காவல் நிலைய சுற்றுப்புறத்தையும், காவலர்களின் குடியிருப்புகளையும் பார்வையிட்டு சுத்தமாக பராமரிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் விவரங்களையும் கேட்டறிந்தார். காவலர்களின் குறைகள் கேட்டறிந்தார்.