Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

அரியலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி சான்றிதழ் பெற்றார்

அரியலூர்,மே 5: அரியலூர் தொகுதியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக வேட்பாளர் தாமரை.எஸ்.ராஜேந்திரன் 24,498 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அரியலூர் தொகுதியில் நேற்று முன்தினம் வாக்கப்பதிவு எண்ணும் பணி நடந்தது. இதில் முதல் சுற்றிலேயே அதிமுக வேட்பாளர் தாமரை.எஸ்.ராஜேந்திரன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் லதா பாலசுப்ரணியனை காட்டிலும் 1,289 வாக்குகள் முன்னிலை பெற்றார்.

2ஆவது சுற்றில் 2,432 வாக்குகளும், 3ஆவது சுற்றில் 3,830 வாக்குகளும், 4ஆவது சுற்றில் 4094 வாக்குகளும் பெற்று முன்னிலையில் இருந்தார். 25ஆவது சுற்றுகளின் முடிவில் திமுக வேட்பாளர் லாதாபாலசுப்ரமணியனை விட 24,497 வாக்குள் அதிகம் பெற்று இரண்டாவது முறையாக அரியலூர் சட்டப்பேரவை உறுப்பினராக தாமரை.எஸ்.ராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பின்னர் அரியலூர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட தாமரை.எஸ்.ராஜேந்திரன் வெற்றிச் சான்றிதழை அரியலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரேமி வழங்கினார்.