Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

அரியலூரில் தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை

தா.பழூர், செப்.5: அரியலூரில் தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே ஆலவாய் வடக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் இளையராஜா (24) விவசாயி. செந்தில்குமாருக்கு 3 மகன்கள் ராமர், லட்சுமணன், இளையராஜா ஆகியோர் உள்ளனர். இதில் மூத்த மகன் ராமர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு விபத்தில் இறந்து விட்டார். இதில் இளையராஜா மிகவும் கவலைப்பட்டு புலம்பி வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த இளையராஜா வீட்டில் யாரும் இல்லாத பொழுது தனது வீட்டின் உள்ளே உள்ள ஜன்னல் பகுதியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற விக்கிரமங்கலம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விக்கிரமங்கலம் போலீசில் இளையராஜா வின் தந்தை செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.