ஜெயங்கொண்டம், செப். 5: டாஸ்மாக் கடைஊழியர்கள் போராட்டத்தால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனால் மதுப்பிரியர்கள் ஏமாற்றமடைந்தனர். அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் 2 அரசு மதுபான கடைகள் உள்ளன. இந்நிலையில் வெண்ணங்குழி மற்றும் நெல்லித்தோப்பு ஆகிய கிராமங்களில் அமைந்துள்ள அரசு மதுபான கடைகள் மூடப்பட்டிருந்தது. இதனால் நூற்று கணக்கான மது பிரியர்கள் அரசு மதுபான கடை திறக்கப்படாததால் சோகத்தில் திரும்பிச் செல்வதை பார்க்க முடிந்தது.
அரசு மதுபான கடைகளில் வேலை செய்யும் மேற்பார்வையாளர், மது விற்பனையாளர் ஆகியோர் காலி மது பாட்டில் வாங்குவதில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கவும், காலி மது பாட்டில்களை வாங்க பணியாளர்களை அமர்த்தாமல் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கவும் பாட்டிலுக்கு ரூ. 10 வாங்கும் அரசு மதுபான கடை விற்பனையாளர்களை சஸ்பெண்ட் செய்வதை தவிர்க்கவும் இந்த போராட்டம் நடைபெறுவதாக அரசு மதுபான கடைகள் பணியாளர்கள் கூறியதாக மது பிரியர்கள் கூறியுள்ளனர். இதனால் இந்த பகுதியில் அரசு மதுபான கடைகளும் நேற்று மூடப்பட்டிருந்தது


