Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அரியலூர் மாவட்டத்தில் கோழிகளுக்கு பிப். 14 வரை தடுப்பூசி முகாம்: விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள கலெக்டர் அழைப்பு

அரியலூர், பிப். 5: அரியலூர் மாவட்டத்தில் கோழிகளுக்கு பிப். 14ம் தேதி வரை தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி இரு வார சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகின்றது.

நடப்பு ஆண்டில் பிப்ரவரி 14 வரை இருவாரங்கள் கோழிகளுக்கான “கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி பணி சிறப்பு முகாம்” அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நடைபெற உள்ளது. இம்முகாமில் 8 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து கோழிகளுக்கும் இத்தடுப்பூசியானது மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, அனைத்து கோழி வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் இம்முகாமில் கலந்துகொண்டு தங்கள் கோழிகளுக்கு தடுப்பூசி போட்டு பயன் பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.