ஜெயங்கொண்டம், நவ. 4: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு குறித்தும் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி மற்றும் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. மாராத்தான் போட்டிக்கு ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமை வகித்தார். போதை பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் அவற்றை தடுக்கும் விதிமுறைகள் உள்ளிட்டவைகள் பற்றி மாரத்தான் கலந்து கொண்ட மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஜெயங்கொண்டம் டிஎஸ்பி வேல்முருகன் ஏற்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து மினி மாரத்தான் போட்டி தொடக்கி வைத்தார். மினி மாரத்தானில் எம்ஆர் கல்லூரி, சோழ தேசம் ஸ்போர்ட்ஸ் அகாடமி, பெரியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். மாரத்தான் போட்டியானது ஜெயங்கொண்டத்தில் நேரு நகரில் இருந்து சின்னவளை வழியாக பைபாஸ் ரோட்டில் முடிவடைந்தது. போட்டியின் முடிவில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து போட்டியில் கலந்து கண்டு இலக்கினை அடைந்தவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்களை டிஎஸ்பி வேல்முருகன் வழங்கினார். மாரத்தான் முடிவில் காவல்துறையினர் மற்றும் மாரத்தானில் கலந்து கொண்ட மாணவர்கள் உள்ளிட்டோர் போதைப் பொருளுக்கு எதிரான உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் சப் இன்ஸ்பெக்டர் தனஞ்ஜெயன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். இறுதியில் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் சங்கர் நன்றி கூறினார்.


