Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அரியலூர் அண்ணாசிலை அருகே விலைவாசி உயர்வை கண்டித்து சிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர், நவ. 4: அரியலூர் அண்ணா சிலை அருகே விலைவாசி உயர்வைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயர்வைக் கண்டித்தும், விலைவாசி உயர்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் ஒன்றியச் செயலர் பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர் தண்டபாணி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். பொருளாளர் ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.