Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

அரியலூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முப்பெரும் விழா

அரியலூர்,மே4: அரியலூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முப்பெரும் விழா நடந்தது. அரியலூரிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு, மாநில அளவில் விருதப்பட்ட ஆசிரியர்களுக்கு பாராட்டு, சிறந்த பள்ளி பாராட்டு சான்றிதழ் பெற்ற இயக்க ஆசிரியர்களுக்கு பாராட்டு என முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அரியலூர் வட்டாரத் தலைவர் அருள்ஜோதி தலைமை வகித்தார். முன்னாள் வட்டாரச் செயலர் ராமராஜூ முன்னிலை வகித்தார்.

அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் இணைப் பொதுச் செயலரும், உலகத் தமிழாசிரியர் பேரவையின் பொதுச் செயலாளருமான ரெங்கராஜன் கலந்து கொண்டு, பணி ஒய்வுப் பெறும் ஆசிரியர்களுக்கும் மற்றும் மாநில, மாவட்ட அளவில்பாராட்டுச் சான்றிதழ் பெற்ற ஆசிரியர்களுக்கும் பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார். முன்னதாக அரியலூர் மாவட்டத் தலைவர் சண்முகம் அனைவரையும் வரவேற்றார். முடிவில் வட்டாரப் பொருளாளர் சேகர் நன்றி கூறினார்.